மதுரையின் பவர் சென்டர்கள்.
மதுரை மாவட்ட அரசியலில் கடந்த காலங்களில் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சக்தி வாய்ந்த தலைவர்களாக வலம் வந்தனர். ஆனால் தவெக ஆட்சி மலர்ந்த பிறகு, திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ள சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரையின் ஒற்றை அதிகார மையமாக உருவெடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது.
கோயில் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் இவரே முன்னிலை வகித்து வருவதால், சக கட்சி எம்எல்ஏக்களும், உள்ளூர் நிர்வாகிகளும் சற்றே ஒதுங்கி பிந்தங்கியுள்ளனர். எ
திர்க்கட்சியான திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் மௌனம் காப்பதும், அதிமுக தரப்பிலும் இவரைப்பற்றி பெரிய அளவில் விமர்சிக்காததும் இவரது பலத்தை மேலும் கூட்டியுள்ளது. இருப்பினும், கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளிடையே இவரது ஆதிக்கம் குறித்த முணுமுணுப்புகளும் அவ்வப்போது எழுந்து தான் வருகின்றன.