கொவிட்-19 தொற்றினால் போர்த்துக்கலில் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

11.05.2021 12:10:30

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் எட்டு இலட்சத்து 645பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் போர்த்துக்கலில் இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து 39ஆயிரத்து 740பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 993பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 158பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆயிரத்து 102பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 73பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.