அமெரிக்கா - ஈரான் மோதல்.
|
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்கா இடைமறித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வியாழக்கிழமை அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் வெடித்துள்ளது. ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தியதை அடுத்து இந்த தாக்குதல் தொடங்கி இருப்பதாக ஈரானிய செய்தி ஊடகம் IRIB தகவல் தெரிவித்துள்ளது. |
|
அதே சமயம் இஸ்ரேல் ஹயோம் என்ற பத்திரிகையும் இந்த மோதலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு முழுமையான தகவலும் வெளிவரவில்லை. இஸ்ரேல் அதிகாரி வழங்கிய தகவலில், ஈரானின் எல்லையில் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றதாகவும், அப்போது அந்த கப்பலை இடைமறித்து சோதனை நடத்திய போது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |