
மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள்
சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது: ஒவ்வொரு மாணவருக்கும் சிற்பமாக மாறும் ஆற்றல் உண்டு, அதற்கான தேவையும் உண்டு. மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள். மாணவர்கள் ஒழுக்கமும், பண்பும், அறமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது சிற்பி திட்டம்.
போதை மற்றும் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும். சக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக சிற்பி மாணவர்கள் விளங்க வேண்டும். மனிதரும், சிம்பன்ஸியும் ஒன்று. சிற்பி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, போலீசார் செதுக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.