’பாதை வெற்றி உறுதியாகிறது’

07.03.2024 07:00:00

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகள் அனைத்தும்அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு,  அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக்கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும்எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன் கிழமை (06) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் இவ்வாறு கூறினார்.

சிலஅரசியல் குழுக்கள் அதிகாரத்தைப் பெற்றுகொள்ளும் நோக்கில் யதார்த்தத்தை மறந்துவிட்டு, கற்பனைக்கதை சொல்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்சனைகளுக்கு, சில்லறைத் தனமான தீர்வுகள்இல்லை என்றும், அவ்வாறான தீர்வுகளால் நாட்டின் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாதென்பதை அடிப்படை பொருளாதார அறிவுள்ளவர்கள் அறிவர் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் பயணிக்கும் பாதையின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அந்தபாதையில் முன்னேறிச் செல்வதற்கான சட்டத்திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கஎ திர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரமறு சீரமைப்பு ச்சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருப்பதாகவும் கூறினார்.

போகும் பாதையில் முன்னேறிச் சென்று பொருளாதாரம் வலுவடைவதன் பலனை, நாடு என்ற வகையில் அடைந்துகொள்வதா? இல்லாவிடின் அந்தசெயன் முறையிலிருந்து விடுப்பட்டுஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்த இருள் யுகத்துக்குள் மீண்டும் செல்வதா? என்பதை தீர்மானிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்ஜனாதிபதிஆற்றியஉரையில்,

இன்று நமது நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும், இதனை ஏற்றுக் கொண்டதாக காட்டிக்கொள்ளாமல், நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.

பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், மக்கள் அதை உணரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் மீது தேவையற்றவகையில் வரிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள்விலைகள் தேவையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் என தெரிவித்தார்.