விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!
நடிகை த்ரிஷா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நிலையில் அவரது சூப்பர் ஹிட் திரைப்படமான ‘96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
‘96’ படத்தின் அடுத்த பாகத்திற்காக த்ரிஷாவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இது த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது, அஜித் உடன் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’, மோகன்லால் உடன் ‘ராம்’, டொவினோ தாமஸ் உடன் ‘ஐடெண்டிட்டி’ போன்ற படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், நேற்று பூஜை செய்யப்பட்ட சூர்யாவின் 45வது படத்திலும் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.