
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது.
13.05.2025 08:03:45
ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய நிலையில் அவர் இதனை தெரிவித்தார்
அத்துடன் ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி. பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டதுடன் இதுபோன்ற தண்டனையை அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் .தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்