(NTC) தலைவர் கலாநிதி பாண்டுர திலீப இராஜினாமா

28.03.2025 07:07:31

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் கலாநிதி பாண்டுர திலீப விதாரண அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் அவர் இராஜினாமா செய்ததற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த 3வது நபர் கலாநிதி பாண்டுர திலீப விதாரண ஆவார்.

முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ருவான் விஜயமுனி ஆகியோர் அந்தப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.