புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

09.07.2024 07:58:00

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன், இன்று (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடிய போதே அவர்  சத்தியப்பிரமாணம் செய்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் சண்முகம் குகதாசன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.