சவாலான நேரம் இது - சமந்தா

16.04.2022 16:00:35

 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' விரைவில் வெளிவர இருக்கிறது. தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

திருமணம் செய்து கொண்ட பின்னும் சமந்தா முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் தான் இருந்தார். கணவருடன் பிரிவு அறிவித்த பின்னும் சமந்தாவின் மார்கெட்டிற்கும், இமேஜிற்கும் எந்த குறைவும் ஏற்படவில்லை. இருப்பினும் தன்னை சினிமாவில் இன்னும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான கடும் பயிற்சிகளில் இருக்கிறார் சமந்தா. அதில் ஒன்று இடைவிடாத உடற்பயிற்சி.

நேற்று பளுதூக்கிய வீடியோ ஒன்றை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் அதற்குக் கிடைத்துள்ளது. அந்த வீடியோவுடன், “வலிமையான உடல், வலிமையான மனம். 2022--23 எனக்கு உடல் ரீதியாக மிகவும் சவாலான நேரம். ஒரு நேரத்தில் ஒரு படியாக, நெருப்பாக அதைக் கொண்டு வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.