தவெகவுக்கு தாவும் அதிமுக பெரிய தலைகள்!.

13.06.2026 11:17:00

சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்திருத்திருக்கிறது. தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தியடைந்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 24 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தார்கள்.

இதையடுத்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியவரை நேரில் போய் சந்தித்தார் முதல்வர் விஜய். அதோடு, சட்டசபையில் தமிழக முதல்வர் விஜய் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது  அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் அதை ஆதரித்து வாக்களித்தனர்..

இதில் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த 24 பேரிடம் இருந்த முக்கிய பதவிகளை பறித்தார். ஒரு பக்கம் அதிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர், ஒரு கட்டத்தில் சிவி சண்முகத்தை தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியிடமே போய் சேர்ந்து விட்டனர்.
 

ஆனாலும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவியை எடப்பாடி பழனிச்சாமி இதுவரை கொடுக்கவில்லை. இதில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஒருபக்கம் அவர்கள் தவெகவில் இணையலாமா என யோசித்து வருவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

ஏற்கனவே அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் தவெகவுக்கு சென்று விட்ட நிலையில் வேலுமணியும், தங்கமணியும் தவெகவில் இணைய முடிவெடுத்திருப்பது அதிமுக வட்டாரத்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.