20ஆம் திகதி ஐதேகவின் ஆண்டு விழா!.

13.09.2025 09:36:57

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது