பொன்முடி பதவி பறிப்பு..!

11.04.2025 08:06:15

அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், சற்றுமுன் திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று நடந்த திமுக கூட்டத்தில், பொன்முடி, விலை மாதுவை ஒப்பிட்டு  மிகவும் கொச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான எதிர்வினையாக திமுக எம்பி ஏ. கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்

இந்த சர்ச்சையின் பின்னணியில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி அவர்கள் அவர் வகித்து வரும் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி பேசிய கருத்துகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.