ரஷ்ய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் உக்ரைன் ட்ரோன்கள்

23.05.2022 10:40:07

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய படைகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி  உக்ரைன் இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியதில் ரஷ்யாவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் அத்துமீறி தாக்குதல் நடத்து வரும் ரஷ்ய படைகள் மீது உக்ரைனின் 45வது தனி பீரங்கி படை, உள்நாட்டில் வடிவமைக்கபட்ட ட்ரோனை பயன்படுத்தி துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 1 எரிபொருள் டிரக் மற்றும் சில ஆயுதம் தாங்கிய இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்திய இந்த ட்ரோன்கள் (UAV complex Spectator) கடந்த 2014ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது உக்ரைனுக்கு அதிகமான ட்ரோன் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் கீவ் பாலிடெக்னிக் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டன. இவை சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிமீ தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.