அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் .

23.10.2026 08:43:05

அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இன்னிலையில் 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த ‘CORINTHIAN’ எனும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று பிற்பகலிலேயே ஆரம்பிக்கப்பட்டதால், 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடிந்துள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எரிவாயு இருப்பு கிடைத்துள்ளதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள் வழமை போன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.