தவெகவை சீண்டிய சேகர் பாபு!
ஈரோடு பெருந்துறையில் தவெக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் செய்திருந்தார். மேலும் போலீசார் பல கட்டுப்பாடுகளையும் விதித்திந்ருந்தனர். அதையும் மீறி இந்த கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் இந்தமுறை திமுகவி மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். அதிலும் திமுக சொன்ன வாக்குகளை நிறைவேற்றவில்லை.. திமுக ஒரு தீய சக்தி என்றெல்லாம் பேசினார் விஜய்.
‘நீங்கள் என்ன ஆட்சி நடத்துகிறீர்களா இல்லை கண்காட்சி நடத்துகிறீர்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தீயசக்தியான திமுகவுக்கும் தூய சக்தியான தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுரிடம் கேள்வி எழுப்பியதற்கு ‘இன்னமும் சினிமா நடிகர் போல பன்ச் வசனம்தான் பேசிக் கொண்டிருக்கிறார் விஜய்.. பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று பதில் கூறியிருக்கிறார்.
நேற்று விஜய் திமுகவை விமர்சனம் செய்தது பற்றி உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னிடம் கேட்பது போல அவரிடம் என்றாவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?.. கேட்டு பாருங்கள் புரியும்’ என்று கூறினார். அதேபோல், தவெக கொலைகார சக்தி என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சொல்லியிருந்தார்.