காங்கிரஸ் திட்டம் என்ன?.
காந்தி உள்ளிட்ட பலராலும் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ஆகிய மூன்று தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தை ஆண்டது . ஆனால் 1967ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை திமுக தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்தது. அதன்பின் தனித்துப் போட்டி, அதிமுகவுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி என காங்கிரஸ் கட்சி மாறி மாறி பயணித்தது. கடந்த பல தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது காங்கிரஸ்.
அதேநேரம் திமுக கூட்டணி ஆட்சி திமுக வெற்றி பெற்றும் காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் எந்த பங்கையும் திமுக கொடுக்கவில்லை. தற்போது இது தொடர்பான குரல் காங்கிரஸில் அதிகமாக ஒலிக்க துவங்கியிருக்கிறது.தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறோம்.. அதற்கான குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் கோபிநாத் பேசியிருந்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுகவை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் சில முக்கிய துறைகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு திமுகவை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள். எனவே திமுக ஆட்சி அமைக்கும் போது காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் என்ன என்பதே காங்கிரஸின் கேள்வியாக இருக்கிறது.
ஆனால் திமுக எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெ மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவும் எனத்தெரிகிறது. விஜய் கட்சி துவங்கியபோதே எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என சொல்லி இருக்கிறார் .
ஆனால் திமுக இதுவரை அப்படி சொல்லவில்லை. எனவே விஜய் பக்கம் போகலாமா என்கிற திட்டமும் காங்கிரசுக்கு இருக்கிறதாம். ஒருவேளை காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தவெகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.