பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!

10.03.2024 11:15:32

பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மீண்டும் அஸிப் அலி ஸர்தாரி (யுளகை யுடi ணுயசனயசi) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, பாகிஸ்தானின் 14ஆவது ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி பொறுப்பேற்கிறார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவின் கணவரான இவர், ஜனாதிபதியாவது இது இரண்டாவது முறை ஆகும்.

2008 முதல் 2013 வரை ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், தற்போது 11 ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார்.

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் நேற்று நடைபெற்றது.

இதில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகள் பெற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு எதிராக போட்டியிட்ட முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகள் கிடைத்தன.

இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்போது, நாட்டை முன்னெடுத்துச் செல்ல அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து செயற்;பட வேண்டும் என ஸர்தாரி கேட்டுக்கொண்டார்.

மக்களில் ஒருவர் இரண்டாவது முறையாவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது