கொவிட் தொடர்பான தரவுகள் மறைக்கப்படுகிறதா?
19.08.2021 05:00:00
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளாக இருந்தாலும், உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், அதற்கு அப்பாலுள்ள பகுதிகளிலுள்ள முடிவுகள் நிறைவடையக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த உதாரணத்தைக் கூறுவதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அந்தத் தரவுகளை அறிவிப்பதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.