கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்... கதாநாயகி யார் தெரியுமா?

13.02.2021 10:32:52

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக புதிய படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.