காங்கிரஸ் பிரமுகர் கழுத்து அறுத்து கொலை

26.02.2022 16:59:20

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், பிடதி தாலுகா, பைரவனோட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணப்பா (60). காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர் தனது கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் அந்த பண்ணை வீட்டில் வைத்தே இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் வேலையும் அவர் செய்து வந்தார். 

 

இந்நிலையில் நேற்று இரவு அந்த பண்ணை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மணப்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை மணப்பா கொலை செய்யப்பட்டது பற்றி பிடதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அந்த தகவலின் பேரில் பண்ணை வீட்டிற்கு சென்ற போலீசார் மணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மணப்பாவை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது குறித்து தெரியவில்லை.