அலாஸ்காவில் விமானம் விபத்து – எண்மர் உயிரிழப்பு.

21.08.2026 12:06:00

அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 441 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

அங்கரேஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கேப் நியூவென்ஹாம் நோக்கிப் பயணித்த விமானம், கேப் நியூவென்ஹாம் ரேடார் தளத்துக்கு மேற்கே நேற்று பிற்பகல் சுமார் 12.15 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேப் நியூவென்ஹாம் தளமானது அலாஸ்கா வான்வெளி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்களைக் கண்காணிக்கும் தொலைதூர ரேடார் தளங்களின் வலையமைப்பில் ஒன்றாகும்.

குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.