ஆஸ்கர் விருது வென்ற நடிகை காலமானார்.

12.10.2025 15:16:30

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டயான் கீட்டன். இவருக்கு வயது 79. அமெரிக்காவை சேர்ந்த இவர் 1970ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். தி காட்பாதர் 1&2, அனி ஹால், சம்மர் கேம்ப், ஃபாதர் ஆஃப் தி பிரிட், புக் கிளப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அனி ஹால் மற்றும் தி காட்பாதர் படங்களுக்காக நடிகை டயான் கீட்டன் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

மேலும், பல்வேறு படங்களுக்காக எமி விருது, கோல்டன் குளோப் விருது என விருதுகளை வென்று குவித்துள்ளார் நடிகை டயான் கீட்டன்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான டயான் கீட்டன் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவு பெரும் துயரத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.