விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வரும் 2 கொரிய நிறுவனங்கள்.
புதிய தமிழக அரசின் தொழில்வளர்ச்சிப் பாதையில் மற்றொரு மகுடமாக, கொரியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது புதிய முதலீட்டை மேற்கொள்ள முன்வந்துள்ளன. கொரியாவின் புகழ்பெற்ற 'மோட்டிவ்லிங்க்' நிறுவனம், 'டோங்யாங் பவர்' நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரம்மாண்ட திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.
இத்திட்டத்திற்காக சுமார் 30 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் பரப்பளவில் நிறுவனத்தின் தலைமை கார்ப்பரேட் அலுவலகமும், மீதமுள்ள 22 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன உற்பத்தி ஆலையும் அமையவுள்ளன. மின்சார ஆற்றல் மாற்றம் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் தயாரிக்கும் 'செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி அமைப்பை' இந்த ஆலை கொண்டிருக்கப் போகிறது.
தமிழக அரசின் சிறப்பான புதிய தொழில் கொள்கையும், விரைவான நிர்வாக அனுமதிகளுமே இந்த சர்வதேச முதலீட்டைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
இந்த புதிய முதலீட்டின் மூலம் நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், மின்சக்தி மற்றும் மின்னணுவியல் துறையில் உலகளாவிய உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இத்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.