சீன் பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்!.

31.10.2026 11:48:26

சூர்யாவுக்கு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து அவரின் சீன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் கேரள நடிகர், நடிகைகள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டிர்யெலர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு சீன் திரைப்படம் வருகிற நவம்பர் 6ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது..

துபாயில் நிறைய மலையாளிகள் இருப்பதாலும், படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் நடித்துள்ள பலரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த நிகழ்ச்சிக்கு கேரளாவை சேர்ந்தவர்கள் நிறைய பேர் கூடி விட்டார்களாம்.

இதனால் சூர்யாவை அருகில் பார்க்கலாம் என்று சென்ற தமிழ் ரசிகர்கள் சூர்யாவின் அருகிலேயே செல்ல முடியாமல் போய்விட்டதாம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த தவறு நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது.