கிளிநொச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 21ம் திகதி தடுப்பூசி ஆரம்பம்!

19.10.2021 06:18:03

கிளிநொச்சியில் 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 52 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.