ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்!
|
மக்கள் ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் "கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றிலேயே சுந்தர் பிச்சை இதனை கூறியுள்ளார். ஏஐ தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். |
|
இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன." "நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால்" ஏஐ கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் "இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. "எங்களால் முடிந்த அளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். |