பாலின மாற்று அறுவைச் சிகிச்சை: வத்திக்கான் சர்ச்சைக் கருத்து!

09.04.2024 07:37:12

பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையானது மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக  வத்திக்கானின் ‘கோட்டுபாடு அலுவலகம்‘ அறிவித்துள்ளது.

 

போப் பிரான்சிஸ்ஸின் ஒப்புதலுடன்  கண்ணியம் தொடர்பாக வத்திக்கானின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ள 20 பக்கங்களைக் கொண்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வத்திக்கான் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.