மத்திய அமைச்சரவைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

23.11.2021 06:54:36

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இதன்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதேவேளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரம் 29 ஆம் திகதி கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.