இஸ்ரேலிய பிரதமர் தேர்தலில் டிரம்ப் போட்டி!
|
இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படைகள் இணைந்து தொடங்கிய ஈரான் போர் இதுவரை எந்தவொரு நிரந்தர தீர்வும் எட்டப்படாமல் நீடித்து வருகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. |
|
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்காவின் தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்த பிறகு இஸ்ரேலுக்கு செல்வது குறித்து யோசித்து வருவதாகவும், இஸ்ரேலில் தனக்கு 99% ஆதரவு இருப்பதால் அங்கு நடைபெறும் அடுத்த பிரதமர் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை டிரம்ப் வேடிக்கையாக தெரிவித்ததாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இஸ்ரேலிய பிரதமரை வெகுவாக பாராட்டிய டிரம்ப், இஸ்ரேலில் ஆளும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நெதன்யாகுவிற்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். |