கனிம வளங்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம்.
|
தமிழ்நாடு அரசு இயற்கை வளங்கள் துறை சார்பில் பிற மாநிலங்களுக்கு கருங்கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கடத்துவதைக் கட்டுப்படுத்தவும், தற்காலிகத் தடை விதிக்கவும் புதிய திருத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, “தமிழ்நாடு சட்டவிரோதச் சுரங்கம், கனிமங்கள் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தடுத்தல் மற்றும் கனிம விற்பனையாளர்கள் விதிகள் 2011” இல் புதிய சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. |
|
அதாவது கடந்த 1957ஆம் ஆண்டின் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் பிரிவு 23சி வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த அதிரடித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, பிற மாநிலங்களுக்கு கருங்கற்கள் மற்றும் அது சார்ந்த கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை முழுமையாக ஒழுங்குபடுத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்குள் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் கருங் கற்கள், பாறைகள், உடைக்கப்பட்ட ஜல்லிக் கற்கள், எம்-சாண்ட் , மெட்டல் ஜெல்லி, பேலஸ்ட்கள், ஆலைக்கல் மற்றும் சாலை கட்டுமானக் கற்கள் போன்றவற்றின் மீது தற்காலிகத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த இந்த ஆணை வழிவகுக்கிறது. இந்த அரசாணையைத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஷுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார். |