பிறந்து 5 நாட்களேயான சிசுவின் தாய் மரணம்
18.08.2021 13:59:21
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவின் தாய் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இருப்பினும் சிசுவுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது