எடிசன் விருது வென்றது ’ஐயோ சாமி’ பாடல்
28.03.2024 00:14:29
தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16வது எடிசன் விருது வழங்கும் விழாவில், "ஐயோ சாமி" என்ற இலங்கைத் தமிழ்ப் பாடலைப் பாடிய விந்தி குணதிலக்க, 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.
விருதினை பெற்றுக் கொண்ட விந்தி குணதிலக்க நேற்று இரவு ஸ்ரீலங்கன் எயார் விமானமான UL 218 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விருது வழங்கும் விழா சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகிறது, மேலும் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மார்ச் 24 அன்று இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது.
இப்பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.