30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம் திகதி இடைத்தேர்தல்

28.09.2021 10:14:25

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம்  திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் காலியாக உள்ள எம்.பி இடத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.