நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா பாதிப்பு

10.01.2022 08:41:04

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்த பல படங்கள் பின்வாங்கி விட்டன. மேலும் கடந்த மாதத்தில் நடிகர்கள் கமலஹாசன், விக்ரம், வடிவேலு ,இயக்குனர் சுராஜ் என பல கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் நடிகர் அருண்விஜய், மீனா, திரிஷா, சத்யராஜ் உள்பட பலர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து உள்ள விஷ்ணு விஷால், 2022 பாசிடிவ் ரிசல்ட் ஆரம்பமாகியுள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். மேலும் உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சல் உள்ளது. இதிலிருந்து விரைவில் மீண்டு வர ஆவலோடு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.