ஜின்பிங்குடன் கலந்துரையாடவுள்ள ஜோபைடன்

13.11.2021 06:42:30

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நாளை மறுதினம்(15) சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள்குறித்து கலந்துரையாடப்படும் என அந்த வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை.

வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பயனாக நாளை மறுதினம் ஜோபைடன் சீன ஜனாதிபதியை இணைய வழியாகச் சந்திக்கவுள்ளார்.