வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா?

01.12.2025 14:11:37

பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார். பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அதர்வா அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் DNA படம் வெளியானது.

இந்நிலையில், அதர்வாவிடம் வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கு சவால்கள் என்பது இருந்தது.

என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கு உத்வேகத்தை தந்தது, அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.