
RCB அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!
எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் பெங்களூரு பொலிஸார் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலேவை (Nikhil Sosale) கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் RCB சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் தலைவரான சோசலே, மும்பைக்கு விமானத்தில் சென்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தவிர வெற்றி கொண்டாட்டங்களின் ஏற்பாட்டாளர்களான ஏனைய மூன்று அதிகாரிகளும் தனித்தனியான சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளே கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெங்களூரு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
RCB அணியின் நிகழ்வு ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஆகியோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், KSCA செயலாளர் மற்றும் பொருளாளர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸார் அவர்களின் வீட்டை அடைந்தனர் ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது