விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை Flight Mode மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்?
விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது, நமது கைபேசியின் மின்கலம் (பேட்டரி) வலுவிழக்கும், விமான சிப்பந்திகளின் பணிச்சுமை கூடும், இதர பயணிகளுக்கு அசவுரியமாக இருக்கும்.
ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.
விமானத்தில் செல்லும் பொழுது,விமானம் மேலெழும்போதும் தரையிரங்கும்போதும் கைப்பேசியை பிளைட் மோடில் வைப்பது,விமான பாதுகாப்பு விதி.
கைப்பேசியின் அலைகள்,விமான தொடர்புகளைப் பாதிக்கும் என்பதால்.இன்னும் நாம் விமான பயணத்தில் முழுப் பாதுகாப்பை எட்டிவிடவில்லை.உதாரணத்திற்கு,தற்போதைய விமான சன்னல் மாறுதலுக்கிடையே எத்தணையோ விபத்துக்களும்,உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, விமான பயணத்தில் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், பயணம் செய்யும் விமானம் மற்றும் அதன் பராமரிப்பு பற்றிய செய்திகளை சிறிதாவது அறிந்து கொள்வது நலம்.