சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையால் ஏமாற்றப்பட்ட அரசாங்கம்

27.12.2022 20:56:59

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையில் சிறிலங்கா அரசியலமைப்பில் 21 திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனபோதிலும், நாணய நிதியத்தின் கடன் இன்னும் அங்கீகரிப்படாத விடயம் அரசாங்கத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் விடயமென நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருமான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடனுக்கான முன்நிபந்தனை

21 திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனை குறித்து இதுவரை மௌனமாக இருந்த அரசாங்கம் தற்போது நாணய நிதியத்தின் கடன் கிட்டவில்லை என்பதால், இதுகுறித்து தெரிவித்துள்ளதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான முன்நிபந்தனையாகவே 21ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதை வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவித்ததாகவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஒருயொரு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர என்பது குறிப்பிடத்தக்கது.