ஜப்பானில் வெளியாகும் கைதி
11.11.2021 05:21:50
இந்திய நடிகர்களின் படங்களில் ரஜினி நடித்த முத்து படம் தான் முதல்முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியானது. அந்த படத்திற்கு அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு அதன்பிறகு ரஜினியின் மேலும் சில படங்களும் ஜப்பானில் வெளியிடப்பட்டது. அதனால் தற்போது ரஜினிக்கென்று ஜப்பானில் ஒரு ரசிகர் வட்டமும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் ரஜினி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி படமும் வருகிற நவம்பர் 19-ந்தேதி கைதி டில்லி என்ற பெயரில் ஜப்பான் மொழியில் வெளியாகிறது.
இதற்கிடையே அடுத்தபடியாக கைதி-2 படத்தை எடுக்கும் வேலைகளிலும் அப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.