சுவாமி விபுலானந்தரின் 74ஆவது சிரார்த்த தின நிகழ்வு

19.07.2021 08:10:00

மேலும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு- கல்லடி இராமகிருஸ்மிசனின் வளாகத்திலுள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில்,  மலர் தூவப்பட்டு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபைத் தலைவர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் மட்டக்களப்பு நகரிலுள்ள திருநீற்றுப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுவாமியின் பாடல்கள் இசைக்கப்பட்டன.

இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டமை  குறிப்பிடத்தக்கது.