மெக்சிக்கோவில் அவசர நிலை பிரகடனம்!

11.02.2026 14:00:22

மெக்சிக்கோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவியுள்ளமை காரணமாகவே இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் இதுவரை 1,245 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாடசாலைகளில் 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில். மெக்சிகோ முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.