ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில், கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் தலைவர்கள் வரவு செலவு திட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களைத் தயார் செய்துவருக்கின்றனர்.
குறிப்பாக, வரவிருக்கும் வரவு செலவு திட்டம் வருமான வரி விலக்குகளை முடக்குவது குறித்து பற்றி ஒரு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுக்க உள்ளார்.