நெதர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட ரோட்ரிகோ டுடெர்டே (

13.03.2025 07:50:44

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின் ஹேக் வந்தடைந்தார்.

அங்கு அவர் பதவியில் இருந்தபோது மேற்பார்வையிட்ட போதைப்பொருள் மீதான கொடிய ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

ஹாங்கொங்கிற்கான ஒரு பயணத்திலிருந்து துபாய்க்கு திரும்பிய டுடெர்ட்டேவை மணிலா விமான நிலையத்தில் வைத்து செவ்வாயன்று (11) பொலிஸார் கைது செய்தனர்.

79 வயதான அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக மாறியுள்ளார்.

தனது நாடுகடத்தலை எதிர்த்துப் போராடிய டுடெர்ட்டே, 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸை வழிநடத்தினார்.

பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.