பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய அமெரிக்கர்கள்

21.01.2021 11:18:36

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தனது தலைமையிலான புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்துவருகிறார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் பைடன். பைடன் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினரை பார்ப்போம்.

 

கமலா ஹாரிஸ் -துணை அதிபர்

விவேக் மூர்த்தி - தலைமை அறுவை சிகிச்சை வல்லுநர்

நீரா டாண்டன் - மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர்

வனிதா குப்தா - உதவி அட்டர்னி ஜெனரல்

சுமோனா குகா - தெற்காசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குனர்