கொரோனாவில் சிக்கிய அனுபமா?
கொடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுபமா அதன் பின்னர் தெலுங்கு , மலையாளம் , குநற்திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மீண்டும் சைரன் மூலம் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்த இவர் தற்போது அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
அதற்கமைய லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடக்ககூடிய கதையாக அமைந்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான “லாவா லாவா” என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.