டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

28.12.2021 05:59:30

ஒமிக்ரொன் அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து 2ஆவது நாளாக 200இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.