இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் சுக்கு, மிளகு பறிமுதல்

19.12.2021 12:44:44

வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் சுக்கு, மிளகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பிரிவு போலீசார் இன்று வேதாளை தென் கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள சுக்கு, மிளகு சிக்கியது. பொருட்களை மதுரையில் இருந்து ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றி தங்கப்பா என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.