பாண் விற்ற 70 பேர் சிக்கினர்

23.10.2022 15:55:02

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாட்டின் பல இடங்களில் சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்குறிப்பிட்ட விற்பனையாளர்கள் சிக்கியுள்ளனர்.

குறைந்த நிறை கொண்ட பாணை தயாரித்த பேக்கரி உரிமையாளர்களிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த அதிகாரி, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு இராத்தல் பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால், 350 கிராம் அல்லது அதற்கும் குறைவான நிறையிலேயே பாண் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.